New hostel

                     புத்தில்லம்
                    NEW HOSTEL
சத்திரம் என்னும் சமூத்திரத்தின் கரையோரத்தில்
கல்விக்கோர் போதி மரம்.
நுழைந்தவுடன் வளனார் சிலை வரும்.
கடந்த பின், கேண்டின்மனம் வரும்.
தொடர்ந்து சென்றால் புத்தில்ல விடுதி வரும்.
     போதி மரத்தின் விழுதுகளில் கூடு கட்டி வாழும்
     அறிவுத் தாகம் கொண்ட குருவிகள் கூடு அது.
     கலாம்  காலமானாலும் - அவரின்
     அதிர்வலைகள் சுற்றித்திரியும் சொர்க்கம் அது.
மிதிவண்டியிலேயே மதியை தொடும் மாமனிதர்கள் எங்கள் இயக்குநர்கள்.
காற்றும் அவர் காலில் விழும் – அவரின்
புல்லாங்குழலில் நுழைய .
அவரே எங்கள் இயக்குநர்
     அமைதியும் மகிழ்ச்சியும் நடனமாடும் முகம் அது.
     என் துணை இயக்குநரின் முகம் அது.
    தேவாமிர்தமும் தோற்றுப் போகும் – எங்கள் ஊத்தாப்பதிடம்.
     தேனும் கூட குனிக்குறுகும் எங்கள் சாம்பாரிடம்.
எட்டு மணி வரை கலகலவென இருக்கும் விடுதி.
8.30க்கு மேல் ஓரே அமைதி.
அமைதியும் புத்தில்லதிற்குள் நுழைய
ஆசைப் பட்டதோ என்னவோ……
     10 மணிக்கு கதவை தட்டும் ஒரு ஒலி.
     போர்வைக்குள் ஒழியும் ஒலியும் ஒளியும்.
      காலை 7.30க்கு விழிக்கும் எங்கள் விழிகள்.
      8.15க்கு அடைக்கப்பட்டும் எங்கள் வழிகள்.
      அதனாலோ என்னவோ தெரியவில்லை.
     நாங்கள் உலகின் அதிவேக பறவைகள்.
மொத்தத்தில் புத்தில்லம்
          புல்லாங்குழல் துளைகளுக்குள் சென்று வரும் தென்றல் தவழும் குட்டிச் சொர்க்கம்.

Comments

Post a Comment

Popular posts from this blog

Artificial Blood